மாமியாரை கட்டையால் அடித்துக் கொலை செய்த மருமகன்... சண்டையை விலக்க வந்த போது விபரீதம்!

காவல் துறை விசாரணை
காவல் துறை விசாரணை

கணவன், மனைவி சண்டையை விலக்கச் சென்ற தனது மாமியாரை கட்டையால் மருமகன் அடித்துக் கொலை செய்த சம்பவம் தும்கூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், தும்கூர் மாவட்டம் மதுகிரி தாலுகா கொடிகேனஹள்ளியைச் சேர்ந்தவர் சையல் சுஹைல். இவர் பெல்கும்பா தாலுகாவைச் சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில், குடும்பத் தகராறு காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கொலை
கொலை

இந்த நிலையில் தனது தாய் அஷ்வித் உன்னிசாவிடம் தனது கணவர் தொடர்ந்து அடித்து துன்புறுத்துவதாக கூறியுள்ளார். இதனால் அவர்களிடையே சமாதானம் செய்து வைக்க சையல் சுஹைல் மாமியார் அஷ்வித் நேற்று வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது சையல் சுஹைலுக்கும், அவரது மனைவிக்கும் இடையே இரவு தகராறு ஏற்பட்டுள்ளளது. அப்போது அவர்களிடையே ஏற்பட்ட சண்டையை அஷ்வித் விலக்கச் சென்றார். அப்போது ஆத்திரத்தில் கட்டையால் தனது மாமியார் அஷ்வித் உன்னிசாவை சுஹைல் சரமாரியாகத் தாக்கினார்.

இதில் ரத்த வெள்ளத்தில் அஷ்வித் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு மதுகிரி பொது மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அஷ்வித் உன்னிசா உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய கொடிகேனஹள்ளி போலீஸார், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். அத்துடன் தப்பியோடிய சையல் சுஹைலைத் தேடி வருகின்றனர். குடும்பச் சண்டையை விலக்க வந்த மாமியாரை மருமகன் அடித்துக் கொலை செய்த சம்பவம் தும்கூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in