வாங்கிய கடனை அடைக்க சொன்ன தாய்: ஆத்திரத்தில் மகன் செய்த கொடூரம்

வாங்கிய கடனை அடைக்க சொன்ன தாய்: ஆத்திரத்தில் மகன் செய்த கொடூரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெற்ற தாயை அவரது  மகன் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கீழ்குப்பம் அடுத்த பாக்கம்பாடி தெற்கு காட்டுகொட்டாயை சேர்ந்தவர் முருகேசன் மனைவி வேலம்மாள் (60). இவருக்கு  சுரேஷ்(31), வேல்முருகன்(29) ஆகிய இரு மகன்களும், செல்வி என்ற மகளும் உள்ளனர். கடந்த 20 வருடங்களுக்கு முன் முருகேசன் இறந்துவிட்ட நிலையில் தாய் வேலம்மாள் மகன்களை வளர்த்து வந்தார். 

இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு வேலம்மாள் தங்கள் குடும்பத்துக்கு இருக்கும்  கடன் தொகை ரூ.17 லட்சத்தை திருப்பி அடைக்குமாறு தனது மகன்களிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கடந்த 4 மாதங்களுக்கு முன் அண்ணன் சுரேஷ், தம்பி வேல்முருகன் ஆகியோருக்கு இடையே  தகராறு ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து இருவருக்கும் பகை இருந்து வந்தது.

இந்த நிலையில், நேற்று மாலை சுரேஷுடன் வசிக்கும் தாயைப் பார்க்க வேல்முருகன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மீண்டும் அண்ணன், தம்பிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மகன் சுரேஷ் மற்றும் உறவினர் முனீஸ்வரன் மகன் கவுதம் ஆகியோர் கட்டையாலும், இரும்பு பைப்பாலும் வேலம்மாளை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த வேலம்மாளை உறவினர்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் வேலம்மாள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷ் மற்றும் கவுதம் ஆகியயோரை கைது செய்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். பெற்ற தாயை மகனே அடித்து கொலை செய்திருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in