மகனை கொன்றுவிட்டு தற்கொலை நாடகம்; பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டால் சிக்கிய பெற்றோர்!

கைது செய்யப்பட்ட தாய், தந்தை, உறவினர்
கைது செய்யப்பட்ட தாய், தந்தை, உறவினர்BG

மதுக்கு அடிமையான மகனை கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடிய தாய், தந்தை, தாய்மாமன் உள்ளிட்டோரை தென்காசி போலீஸார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருகே வல்லம் கிறிஸ்டியன் காலனி 4வது தெருவைச் சோ்ந்தவா் முகைதீன்அப்துல்காதா்- செய்யது அலி பாத்திமா தம்பதியின் மகன் அபு என்ற முகம்மது சித்திக்(25). இவா், வேலைக்குச்செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், இவா் கடந்த 5ம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக, அவரது தாயின் சகோதரா் திவான் அலி, குற்றாலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி, தற்கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா். விசாரணையில் சித்திக்கின் தாய் முன்னுக்கு பின் முரணாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதனிடையே சித்திக்கின் பிரேத பரிசோதனை அறிக்கையில் சித்திக்கின் கழுத்தில் காயம் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீஸார், தாய் பாத்திமாவிடம் விசாரணை மேற்கொண்டதில், சம்பவத்தன்று மகன் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு தகராறு செய்ததால் ஆத்திரத்தில் அவரது வாயை மூடி, கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறியுள்ளார். மேலும் இதற்கு தனது கணவர் மற்றும் சகோதரர் உடைந்தையாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். மூவரை போலீஸார் கைது செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in