அதிர்ச்சி... கர்ப்பிணிக்கு வழங்கப்பட்ட அரசின் ஊட்டச்சத்து தொகுப்பில் பாம்பு!

ஊட்டச்சத்து தொகுப்பில் பாம்பு
ஊட்டச்சத்து தொகுப்பில் பாம்பு

அரசு சார்பில் கர்ப்பிணிக்கு வழங்கிய ஊட்டச்சத்து பரிசு தொகுப்பில் பாம்பு ஒன்று இறந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

ஆந்திர மாநில அரசு சார்பில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பரிசு தொகுப்புகள் அங்கன்வாடி மையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சித்தூர் மாவட்டம், ஜம்புவாரிபள்ளே ஊராட்சி சாந்திநகர் அங்கன்வாடி மையத்தில் நேற்று கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கப்பட்டது.

அதில் மானசா என்ற கர்ப்பிணிக்கு வழங்கிய ஊட்டச்சத்து தொகுப்பில் பேரிச்சம்பழம் பாக்கெட் இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது அதில் இறந்த நிலையில் பாம்பு இருந்தது. இதை பார்த்த கர்ப்பிணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்ப்பிணிக்கு வழங்கப்பட்ட ஊட்டச்சத்து தொகுப்பு பேரிச்சம்பழம் பாக்கெட்டில் இறந்த நிலையில் பாம்பு இருந்தது ஆந்திராவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in