
கோவையில் ஷூவுக்குள் மறைந்திருந்த கொடிய விஷம் கொண்ட நாகப்பாம்பை பாம்பு பிடி வீரர் பத்திரமாக மீட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் புதர்கள் மண்டி இருக்கும் பகுதியில் இருந்து பாம்புகள், தேள்கள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.
இந்த நிலையில் வெள்ளலூர் வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் பள்ளி மாணவர் பிரதீப் என்பவர் தனது வீட்டில் ஷூக்களை வெளியே விட்டிருந்தார். வீட்டின் அருகே பாம்பு சீறும் சத்தம் கேட்டதால் சந்தேகம் அடைந்த வீட்டில் இருந்தவர்கள், ஷூக்கள் வைத்திருக்கும் ஸ்டாண்ட் அருகே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது பிரதீப்பின் ஷூவுக்குள் சுமார் ஒரு அடி நீள, கொடிய விஷம் கொண்ட நாகப்பாம்பு ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அப்பகுதியைச் சேர்ந்த பாம்பு பிடி வீரரான மோகன் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மோகன் லாவகமாக ஷூவுக்குள் பதுங்கி இருந்த பாம்பை பத்திரமாக பிடித்து பிளாஸ்டிக் டப்பா ஒன்றில் அடைத்தார். இதையடுத்து மீட்கப்பட்ட பாம்பு, வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மழைக்காலம் என்பதால் கதகதப்பான இடம் தேடி வந்த பாம்பு ஷூவிற்குள் பதுங்கி இருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நகர்புறமாக இருந்தாலும், பொதுமக்கள் இது போன்ற மழைக்காலங்களின்போது வெளியில் விடும் ஷூக்கள், காலணிகள் ஆகியவற்றை சோதித்த பின்பு அணிய வேண்டும் என பாம்பு பிடி வீரர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
நெகிழ்ச்சி... வேலைக்கு அனுப்பிய பெற்றோர்! முதலாளியால் பட்டம் பெற்ற மாணவிகள்!
ஹனிமூனில் அசோக்செல்வனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கீர்த்தி பாண்டியன்!
மேலும் 38 மீனவர்கள் விடுதலை- நிபந்தனைகளுடன் விடுவித்தது இலங்கை நீதிமன்றம்
பயங்கரம்... ஓடும் பேருந்தில் திடீரென பற்றி எரிந்த தீ... உடல் கருகி 2 பேர் பலி
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்னென்ன? எகிறும் எதிர்பார்ப்பு!