
சீர்காழி அருகே கந்துவட்டி கேட்டு பயங்கர ஆயுதங்களுடன் வீட்டை முற்றுகையிட்ட நபர்களின் அட்டகாசம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த கீழமூவர்கரை மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி.இவரது மனைவி லட்சுமி, மகன் வினோத். லட்சுமி தனது மகனை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்ப திட்டமிட்டு, அதேபகுதியை சேர்ந்த சம்பந்த மூர்த்தி என்பவரின் மனைவி அஞ்சம்மாளிடம் ரூ.1,35,000 கொடுத்துள்ளார்.
இதையடுத்து, வினோத் சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றார். ஆனால், அங்கு அவருக்கு வேலை கிடைக்காததோடு, மீண்டும் நாடு திரும்பும் சூழல் ஏற்பட்டது .
இதுகுறித்து அஞ்சம்மாளிடம் லட்சுமி கேட்ட போது, மீண்டும் நல்ல வேலைக்கு அனுப்பிவைப்பதாக கூறியுள்ளார். இந்நிலையில், லட்சுமி, குடும்பத் தேவைக்காக அஞ்சம்மாளிடம் ரூ.20,000 கடனாக வாங்கியதாக தெரிகிறது. சில காலம் சென்ற நிலையில், அஞ்சம்மாள், லட்சுமியிடம் 20 ஆயிரம் பணத்தை வட்டியுடன் திருப்பி தரச்சொல்லி கேட்டுள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த லட்சுமி தான் கொடுத்த பணத்தில் இருந்து 20 ஆயிரத்தை கழித்துகொள்ள கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக 20 ஆயிரம் ரூபாய்க்கு வட்டியுடன் சேர்ந்து 1 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் தர செல்லி அஞ்சம்மாளின் கணவர் உள்ளிட குடும்பத்தினர் இரும்புக் கம்பி, கத்தி, கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சென்று லட்சுமிக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வீடியோ ஆதாரங்களுடன் லட்சுமி திருவெண்காடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அங்கு அவரின் புகாரை பெறாமல் காவல்துறையினர் அஞ்சம்மாள் தரப்பினருக்கும் ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 19 -ம் தேதி புகார் அளித்துள்ளார். ஆனால் புகார் பெறப்பட்ட நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் காவல்துறையினர் சார்பில் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த லட்சுமி, தனது புகார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வில்லையென்றால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அதிரடி... 10,000 நிறுவனங்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்!
அதிர்ச்சி... இன்று மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது; பயணிகள் அவதி!
உருவானது ஹாமூன் புயல்... 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
துர்கா பூஜை பந்தலில் பயங்கர நெரிசல்... 5 வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்த சோகம்
ராவண வதத்தில் பங்கேற்கும் முதல் பெண்... பிரபல இந்தி நடிகைக்கு குவியும் பாராட்டு