அதிர்ச்சி... கூடலூரில் வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி!

அதிர்ச்சி... கூடலூரில் வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி!
Updated on
1 min read

தேனி மாவட்டம் கூடலூரில் வனப்பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெட்டுக்காடு பகுதியில் ஈஸ்வரன் என்பவர் வேட்டையாட வனப்பகுதிக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவருக்கும் வனத்துறைக்கும் மோதல் ஏற்பட்டதாகவும், அதில் வனத்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியபோது, ஈஸ்வரன் உயிரிழந்ததாக தெரிகிறது.

வேட்டையாட வந்த ஈஸ்வரன் அரிவாளால் தாக்க முயன்றதால், துப்பாக்கிச்சூடு நடத்தியதாக வனத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. குண்டு பாய்ந்த ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில், கிராம மக்கள் வனத்துறை மீது குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

ஈஸ்வரன் அவரது தோட்டத்திற்கு இரவு வேலைக்குச் சென்ற போது, வனத்துறையினர் சுட்டுக் கொலை செய்து உடலை கைப்பற்றி  சென்றதாக புகார் தெரிவித்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வனத்துறையினர் முன்விரோதம் காரணமாக துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாக ஈஸ்வரின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in