வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியை தாக்கிய காட்டு யானை; பதறவைக்கும் வீடியோ... கோவையில் அதிர்ச்சி!

கோவை அருகே யானை தாக்கி மூதாட்டி படுகாயம்
கோவை அருகே யானை தாக்கி மூதாட்டி படுகாயம்

கோவை அருகே வீட்டில் இருந்த வயதான மூதாட்டியை காட்டு யானை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடரும் காட்டு யானைகளின் தாக்குதலால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தில் ஏராளமான காட்டு யானைகள், சிறுத்தைகள், காட்டு மாடுகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அவ்வப்போது இந்த வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளின் அருகே சுற்றித் திரிகின்றன. தற்போது வனப்பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவி வருவதால், உணவு மற்றும் குடிநீர் தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் வேளாண் தோட்டங்களுக்குள் புகுவது வாடிக்கையாக உள்ளது.

இரவு வேலைகளில் காட்டு யானைகள் கூட்டமாகவும் தனியாகவும் அடிக்கடி சுற்றித் திரிகின்றன. இவ்வாறு வரும் காட்டு யானைகள் தாக்குவதில் பொதுமக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதோடு, வேளாண் பயிர்களும் கடுமையாக சேதமடைந்து வருகிறது. இந்த நிலையில் கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே நேற்று முன்தினம் இரவு காட்டு யானை ஒன்று தனியாக சுற்றி திரிவதாக தகவல் பரவியது. இந்த நிலையில் நேற்று அதிகாலை அந்த காட்டு யானை விஷ்ணு என்பவரின் தோட்டத்திற்கு வந்துள்ளது.

மூதாட்டியை யானை தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சி
மூதாட்டியை யானை தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சி

தோட்டத்து வீட்டின் வாசலில் தூங்கிக் கொண்டிருந்த பணியாளர் நாகம்மாள் (70) என்ற மூதாட்டி சத்தம் கேட்டு எழுந்து பார்த்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக இருட்டில் நின்றிருந்த ஒற்றை ஆண் காட்டு யானை மூதாட்டியை முட்டித் தள்ளியது. இதில் தலை மற்றும் உடல் பகுதியில் மூதாட்டிக்கு படுகாயம் ஏற்பட்டது. அப்போது தாக்குதலுக்குள்ளான அந்த மூதாட்டி, ”கணேசா, விநாயகா, என்னை விட்டுவிடு” என்று கூக்குரல் எழுப்பினார். இதையடுத்து அந்த யானை அங்கிருந்து நகர்ந்து சென்றது.

கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக அதிகரிக்கும் காட்டு யானைகள் நடமாட்டம்
கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக அதிகரிக்கும் காட்டு யானைகள் நடமாட்டம்

தொடர்ந்து அருகில் உள்ள மற்றொரு தோட்ட வீட்டில் வைத்திருந்த அரிசியை யானை எடுக்க முயன்றது. அப்போது அங்கு தூங்கிக் கொண்டிருந்த வேலையாட்கள் சத்தம் போட்டபோது, அங்கிருந்த தனலட்சுமி (40) என்பவரை காட்டுயானை தள்ளிவிட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது.

உணவுப் பொருள் தேடி வந்த காட்டு யானை அடுத்தடுத்து இரண்டு பெண்களை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே மூதாட்டி நாகம்மாளை காட்டு யானை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

மாங்கல்ய வரம் தரும் ‘காரடையான் நோன்பு... வழிபடும் முறை... சொல்ல வேண்டிய ஸ்லோகம்!

இந்த 23 வகை நாய்களை இனி வீட்டில் வளர்க்கக்கூடாது... மத்திய அரசு அதிரடி உத்தரவு!

வாட்ஸ்-அப் செயலியில் அசத்தலான அப்டேட்... பயனர்கள் மகிழ்ச்சி!

பகீர்... காதலியின் கையைத் துண்டித்த காதலன்: வேறு ஒருவருடன் நிச்சயமானதால் வெறிச்செயல்!

அதிமுகவுடன் தான் கூட்டணியா?...தேமுதிக மீண்டும் பேச்சுவார்த்தை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in