2 கோடி மோசடி செய்து விட்டு தலைமறைவானவரின் நகைக்கடையை திறந்த போலீஸாருக்கு ஷாக்!

தலைமறைவான தங்கராஜ், லலிதாம்பிகை.
தலைமறைவான தங்கராஜ், லலிதாம்பிகை.

சேலம் டவுன் ராஜகணபதி கோயில் அருகே லலிதாம்பிகை ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நகைக்கடை நடத்தி வந்தவர் தங்கராஜ். தனது நகைக்கடையில் நகைச்சீட்டு நடத்துவதாக கூறி சேலம், ஏற்காடு, ஆத்தூர், வாழப்பாடி என மாவட்டம் முழுவதும் விளம்பரம் செய்தார். ஓராண்டு முடிவில் நகைச் சீட்டு போட்டவர்களுக்கு நகையும், பணத்துக்கான வட்டியும் சேர்த்து தருவதாக கவர்ச்சிகர அறிவிப்பையும் வெளியிட்டார்.

இதை நம்பி மாவட்டம் முழுவதும் ஏராளமானோர் போட்டிபோட்டு நகைச்சீட்டில் சேர்ந்தனர். சுமார் 400-க்கும் மேற்பட்டோரிடம் ரூ. 2 கோடி ரூபாய் வரை பணம் பெற்ற தங்கராஜ் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு திடீரென நகைக்கடையை இரவோடு இரவாக மூடிவிட்டு தனது மனைவி லலிதாம்பிகையுடன் தலைமறைவானார்.

கடையில் தொங்கிய பூட்டைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது குறித்து சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்தனர். இதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தங்கராஜ் மற்றும் அவரது மனைவி லலிதாம்பிகை ஆகியோரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். எனினும், இருவரும் இதுவரை போலீஸ் பிடியில் சிக்கவில்லை.

இச்சூழலில் கடையைத் திறந்து உள்ளே என்ன உள்ளது என சோதனைச் செய்ய போலீஸார் முடிவு செய்தனர். இதன்படி இன்று காலை சேலம் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி ராஜ்குமார் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட போலீஸார் சோதனை மேற்கொள்வதற்காக லலிதாம்பிகை ஜூவல்லரி நகைக் கடையை திறந்து உள்ளே சென்றபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கடையில் நகையோ, ஆவணங்களோ எதுவும் இல்லை. கைப்பை மற்றும் சில பொருட்கள் மட்டும் சிதறிக் கிடந்தன. அதனை மட்டும் அள்ளிக் கொண்டு போலீஸார் கடையை மூடிச் சென்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in