
பயிற்சிக்கு வந்த இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த, ஜிம் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
பெங்களூரு, ராமமூர்த்திநகரில் உள்ள ஜிம்மில் 29 வயது இளம்பெண் ஒருவர், உடற்பயிற்சி செய்து வருகிறார். தினமும் உடற்பயிற்சி முடிந்ததும், ஜிம்மில் உள்ள குளியல் அறையில், அவர் குளிப்பது வழக்கம்.
கடந்த ஞாயிற்றுகிழமை காலை உடற்பயிற்சி முடிந்த பின்னர், குளியல் அறையில் குளித்தார்.இளம்பெண் குளிப்பதை ஜன்னல் வழியாக, ஒருவர் மொபைல் போனில் வீடியோ எடுத்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம்பெண் கூச்சலிட்டார். இதனால் வீடியோ எடுத்தவர் தப்பி ஓடினார். இதனைத் தொடர்ந்து அவர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இந்த புகாரை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். ஜிம்மில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, வீடியோ எடுத்தது ஜிம் பயிற்சியாளர் சிபியாச்சன் (45) என்பது தெரிந்தது. இதனைத் தொடர்ந்து அவரை ராமமூர்த்திநகர் போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.