
மயிலாடுதுறையில் சொத்துத் தகராறில் மாமனாரை மருமகன் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே தத்தங்குடி மேல தெருவைச் சேர்ந்தவர் விவசாயி பாலு. இவரது மகள் பவானி வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவரது கணவர் தரங்கம்பாடி தாலுக்கா பாலூர் கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான கனகராஜ். இவர் கடந்த சில ஆண்டுகளாக மனைவி மற்றும் தனது இரு குழந்தைகளுடன் மாமனார் வீட்டிலேயே தங்கி அங்குள்ள செங்கல் சூளை ஒன்றில் வேலைபார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கனகராஜ், மாமனார் பாலுவின் சொத்துகளை தனது பெயருக்கு மாற்றிக் கேட்டதால் இருவருக்கும் இடையே சொத்துப் பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு கனகராஜ் குடிபோதையில் வீட்டிற்கு சென்று பாலுவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது வாக்குவாதம் முற்றிப் போனதால், கனகராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாலுவை குத்தியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த பாலுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே பாலு இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சீர்காழி போலீஸார் பாலுவின் உடலை கைப்பற்றி உடல்கூறு சோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள சீர்காழி போலீஸார் கனகராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
என் சாவுக்கு எம்எல்ஏ தான் காரணம்... கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த வாலிபர்!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.... வானிலை மையம் அறிவிப்பு
நாளை கடைசி தேதி.... 2250 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
அப்பாடா.... குறைந்தது தங்கத்தின் விலை... நகைப்பிரியர்கள் ஆறுதல்!
சோகம்... ஆந்திரா ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு....18 ரயில்கள் ரத்து