கோவை குண்டுவெடிப்பு கைதி உயிரிழப்பு!

கோவை மத்திய சிறைச்சாலை
கோவை மத்திய சிறைச்சாலை

கோவை மாவட்டம் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஆயுள் தண்டனைக் கைதி, மூளை புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் சிகிச்சை பலனிக்காமல் நேற்று உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் உக்கடம் ஜி எம் நகரை சேர்ந்தவர் என்.எஸ்.அக்கீம் (வயது 46). இவர் 1998ம் ஆண்டு கோவை மாவட்ட குண்டுவெடிப்பு வழக்கில் 40வது குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

கடந்த வருடம் இவருக்கு உடல்நிலை சரி இல்லாமல் போகவே, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் இவருக்கு மூளையில் புற்றுநோய் தொற்று ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. மேலும் உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறப்பட்டது.

இதற்காக அக்கீமுக்கு சென்னை ஸ்டாலின் மருத்துவமனையில் மூளையில் சிறப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனினும் அவருக்கு தொடர்ந்து மூளையில் பாதிப்பு இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து அக்கீமை டாக்டர்கள் கோவை மாவட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.

அவருக்கு பரோல் வழங்கப்பட்டு, கடந்த 3 மாதங்களாக பரோலில் இருந்தபடி வீட்டில் வைத்து சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் எதுவும் பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடந்தது என்பதும், குழந்தைகள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in