மக்களே உஷார்... ஒரே நாளில் 1024 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்!

மக்களே உஷார்... ஒரே நாளில் 1024 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்!

தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் ஒரே நாளில் 1024 கிலோ கெட்டுப் போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் சவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு
கோவையில் சவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு

கடந்த சில தினங்களுக்கு முன்பு நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்டு சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை உருவாக்கியது. அடுத்த அதிர்ச்சியாய் மீண்டும் நாமக்கல் மாவட்டம் சேலம் சாலையில் மிஸ்டர் பர்கர் என்ற கடையில் பர்கர் சாப்பிட்ட இளைஞருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதே கடையில் பர்கர் வாங்கி சாப்பிட்ட 8 பேருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் ஆய்வு நடத்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்தார். உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படாத தரமற்ற உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டிருந்தார். 

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் 1187 உணவகங்களில் கடந்த 19ம் தேதி உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 1024.75 கிலோ அளவிலான கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டுள்ளது. மேலும் 115 உணவகங்களிடம் இருந்து மொத்தமாக ரூ.1.61 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்னமுமே இந்த விஷயத்தில் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்து வருவதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். முன் எப்போதும் இல்லாத வகையில், பிரியாணியில் எலி தலை, கரப்பான்பூச்சி, வெட்டுக்கிளி என தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் அசைவ உணவகங்கள் குறித்து இப்படியான செய்திகளும், வீடியோக்களும் அடிக்கடி வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in