பாலியல் டார்ச்சரை தாங்க முடியல... பெற்றோரிடம் கண்ணீர்விட்ட மாணவிகள்! ஆசிரியருக்கு தர்மஅடி

ஆசிரியருக்கு தர்மஅடி
ஆசிரியருக்கு தர்மஅடி

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை பள்ளிக்கூடத்தில் புகுந்து அடித்து உதைத்த பெற்றோர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் ஆந்திரா மாநிலத்தில் நடந்திருக்கிறது.

ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் படிக்கும் 2 மாணவிகளுக்கு ஆங்கில ஆசிரியர் ஒருவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று மாணவிகளை ஆசிரியர் மிரட்டி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆசிரியரின் பாலியல் தொல்லை அதிகரிக்கவே ஆவேசம் அடைந்த மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தங்களுக்கு நடந்த கொடுமைகளை கூறி கண்ணீர் விட்டு கதறியுள்ளனர்.

இதனால் கொந்தளித்த பெற்றோர்கள், பள்ளிக்கு நேரடியாக சென்று ஆசிரியரை சரமாரியாக அடித்து உதைத்தனர். ஒரு கட்டத்தில் அடியை தாங்க முடியாமல் ஆசிரியர் அங்கும் இங்குமாக ஓடியுள்ளார். இதையடுத்து ஆசிரியரை காவல் நிலையத்தில் பெற்றோர்கள் ஒப்படைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் ஆசிரியரை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து ஆசிரியர் ஒருவர் கொடுத்த பாலியல் தொந்தரவு ஆந்திராவை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in