அதிர்ச்சி! பெண் டாக்டரிடம் பாலியல் சீண்டல்! சிகிச்சைக்கு வந்த நோயாளி கைது

பெண் மருத்துவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நோயாளி 
 எல்லப்பன்
பெண் மருத்துவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நோயாளி எல்லப்பன்

சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவர் பெண் டாக்டரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அவரை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

சென்னை அபிராமபுரம் பகுதியை சேர்ந்தவர் மருத்துவம் மாலினி(40) (பெயர் மாற்றம்). இவர் அரசு மருத்துவமனை ஒன்றில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். மேலும் மருத்துவர் மாலினி மெரினா காமராஜர் சாலையில் தனியார் கிளினிக் ஒன்றில் பகுதி நேர மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு மாலினி கிளினிக்கில் இருந்தபோது 49 வயது மதிக்கத்தக்க ஆண் நபர்‌ ஒருவர் சிகிச்சைக்கு வந்துள்ளார்.‌

அவரிடம் பெண் மருத்துவர் உடல் நலம் குறித்து விசாரித்துவிட்டு அவர் கொண்டு வந்த மருந்து சீட்டை வாங்கி பார்த்தபோது அதில் ஆபாசமாக எழுதி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே மருத்துவர் மாலினி இது குறித்து அந்த நபரிடம் கேட்டபோது, அந்த நபர் பெண் மருத்துவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாக தெரிகிறது.‌ இதனால் பயந்துபோன பெண் மருத்துவர் கூச்சலிட்டதை அடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

பின்னர் இது குறித்து அபிராமபுரம் காவல் நிலையத்தில் மருத்துவர் மாலினி புகார் அளித்ததன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, அபிராமபுரம் பகுதியை சேர்ந்த எல்லப்பன்(49) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காய்ச்சலுக்காக மருத்துவமனைக்கு வந்த எல்லப்பன் பெண் மருத்துவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் போலீஸார் எல்லப்பனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in