பெண் போலீஸ்காரருக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை... தலைமைக் காவலர் மீது பரபரப்பு புகார்!

பாலியல் தொல்லை.
பாலியல் தொல்லை.

சென்னையில் பணிபுரியும் பெண் போலீஸ்காரருக்கு பாலியல் ரீதியாக தலைமைக் காவலர் தொல்லை கொடுப்பதாக பரபரப்பு புகார் கிளம்பியுள்ளது.

போலீஸ்
போலீஸ்

சென்னை பரங்கிமலை போக்குவரத்து பிரிவில் காவலராக பணியாற்றி வருபவர் சங்கீதா (27). இவருக்கு கடந்த சில நாட்களாக அதே காவல் நிலையத்தில் எழுத்தராக பணிபுரிந்து வரும் தலைமைக் காவலர் கணேசன்(40) என்பவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்து வருவதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி தினமும் இரவு நேரங்களில் சங்கீதாவுக்கு அவர் செல்போனில் ஆபாச படங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பி வருவதுடன், அவரை தனது ஆசைக்கு இணங்குமாறு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் காவலர், இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிகிறது.

இதனால் மன உளைச்சல் அடைந்த காவலர் சங்கீதா, தலைமைக் காவலர் கணேசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரங்கிமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் போலீஸார் காவலர் கணேசனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலியல் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்கும் காவல்துறையிலேயே பெண் காவலர் பாலியல் தொந்தரவுக்கு ஆளான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று மகாளய அமாவாசை... இதைச் செய்தால் கடன் தொல்லைத் தீரும்!

இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000... திட்டத்தை உடனே நிறுத்தச் சொல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

பேச மறுத்த காதலி... வெறித்தனமாய் 13 முறை கத்தியால் குத்திய காதலன்!

தங்கம் விலை அதிரடியாக உயர்வு... சவரனுக்கு ரூ.360 உயர்ந்தது!

இன்று வானில் வர்ணஜாலம்... நெருப்பு வளையத்திற்குள் நிகழப்போகும் அற்புதம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in