அப்பளமாய் நொறுங்கிய கார்... லாரி மீது மோதி பயங்கர விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பலி!

விபத்து 7 பேர் பலி
விபத்து 7 பேர் பலி

அசாம் மாநிலம் கவுஹாத்தியைச் சேர்ந்தவர் சதிஷ் குமார் அகர்வால்(45). இவர் நேற்று தனது குடும்பத்தினர் 7 பேருடன் திப்ருகர் வரை சென்றார். அப்போது, சாலையில் அபயாகரமான வளைவில் வேகமாக சென்ற கார் எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. லாரியின் முன் பக்கம் முழுவதும் நசுங்கி சேதமடைந்தது. இதில் காரில் இருந்த சதிஷ் குமார் அகர்வால், பொம்பி அகர்வால், கிருஷ்ண குமார் அகர்வால், நிர்மல்குமார், புஷ்ப சுரேகா, நமல் மற்றும் கோலோ அகர்வால் ஆகிய 7 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.

லாரி ஓட்டுநர் மற்றும் உதவியாளர் படுகாயமடைந்தனர். இருவரும் திப்ருகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார், விசாரணை மேற்கொண்டதில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டியதே காரணம் என தெரிய வந்துள்ளது. வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் கவனமுடன் ஓட்டுமாறு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in