9வது முறையாக செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிப்பு!

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவரது நீதிமன்ற காவல் நவம்பர் 6ம்தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வருகிறார். அவரது நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் காணொலி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நவம்பர் 6ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன்மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 9வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

அதிர்ச்சி... காரில் கட்டுக்கட்டாக லஞ்சப் பணம்; சோதனையில் சிக்கிய பெண் மோட்டார் வாகன ஆய்வாளர்

10 லட்ச ரூபாய் செலவில் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட பெண்!

ரசிகர்களுக்கு விருந்து... உலகக்கோப்பை போட்டியில் இன்று பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா பலப்பரீட்சை!

அதிர்ச்சி... கணவருடன் சண்டை... 19 வயது பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in