செந்தில் பாலாஜி ஜாமீன் மனு
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு... உச்சநீதிமன்றத்தில் திங்கட்கிழமை விசாரணை!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு, உச்சநீதிமன்றத்தில் வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.

கடந்த 2011-15ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில்பாலாஜி, பலரிடம் அரசுப்பணி வாங்கி தருவதாக பணமோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து, கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது.

அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் அமைச்சர் செந்தில் பாலாஜி
மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் அமைச்சர் செந்தில் பாலாஜி

இதையடுத்து செந்தில் பாலாஜி சார்பில் கீழமை நீதிமன்றங்கள் மற்றும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்கல் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என செந்தில் பாலாஜி வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், இரு நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர். இதன்படி வருகிற 30ம் தேதி திங்கட்கிழமை இந்த மனு, நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா.எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று சந்திர கிரகணம்... 8 மணி நேரம் தோஷம்... இரவு சாப்பிடக் கூடாதா?

வரலாற்று சாதனை... ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் 100 பதக்கங்களை வென்றது இந்தியா!

அதிர்ச்சி... கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை; சிக்கியது கடிதம்!

தீபாவளி பண்டிகைக்கு 10,975 சிறப்புப் பேருந்துகள்...நவம்பர் 9 முதல் இயக்கப்படுகிறது!

கெளதம் மேனனுடன் குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்... வைரலாகும் வீடியோ!

x
காமதேனு
kamadenu.hindutamil.in