மின்னல் வேகத்தில் வந்த வாகனம்... தடுத்து நிறுத்திய காவலர்கள் அதிர்ச்சி
கஞ்சாவை பார்வையிடும் எஸ்பி ஜவகர்

மின்னல் வேகத்தில் வந்த வாகனம்... தடுத்து நிறுத்திய காவலர்கள் அதிர்ச்சி

இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா பறிமுதல், நால்வர் கைது

இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு செல்லப்பட்ட 38 லட்ச ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை வேதாரண்யம் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

நாகை மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் போதைப் பொருள் விற்பனையை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கஞ்சா வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று இரவு 9 மணி அளவில் வேதாரண்யம் அடுத்த நெய்விளக்கு கடைத்தெரு அருகே உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தனிப்படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த இரண்டு வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வாகனங்களில் கஞ்சா இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து கடத்திவரப்பட்ட 36 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 147 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கஞ்சா கடத்தலில் சம்பந்தப்பட்ட சரபோஜிராஜன், இளமாறன், பரமன், போத்துராஜா ஆகிய நால்வரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இலங்கைக்கு கடத்துவதற்காக இரண்டு வாகனங்களில் கொண்டுவரப்பட்ட 147 கிலோ கஞ்சாவை நாகை காவல் கண்காணிப்பாளர ஜவகர் பார்வையிட்டார். கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், கஞ்சா கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்றும் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.