நர்மதா ஆற்றில் மூழ்கிய 8 பேரை தேடும் பணி 2வது நாளாக தீவிரம்
நர்மதா ஆற்றில் மூழ்கிய 8 பேரை தேடும் பணி 2வது நாளாக தீவிரம்

நீரில் மூழ்கியவர்களின் கதி என்ன? 2 வது நாளாக தீவிர தேடுதல் வேட்டை!

குஜராத்தில் நர்மதா ஆற்றில் மூழ்கி மாயமான 8 பேரை தேடும் பணிகள் இரண்டாவது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குஜராத் மாநிலம் சூரத் பகுதியைச் சேர்ந்த 17 சுற்றுலாப் பயணிகள் நேற்று போய்சா கிராமத்தில் உள்ள நர்மதா ஆற்றங்கரைக்கு வந்துள்ளனர். அங்குள்ள கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர்கள், பின்னர் அருகில் உள்ள நர்மதா ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. இதில் சிக்கி 3 சிறுவர்கள் உட்பட 8 பேர் மாயமாகினர்.

தண்ணீரில் தத்தளித்த ஒருவரை அருகில் இருந்தவர்கள் மீட்ட நிலையில், உடனடியாக தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் உடனடியாக மீட்பு பணிகளை துவக்கினர். இருப்பினும் நேற்று இரவு வரையிலும் மாயமான 8 பேரில் ஒருவர் கூட கிடைக்கவில்லை. இதையடுத்து இன்று இரண்டாவது நாளாக மாயமானவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

நர்மதா ஆற்றில் மூழ்கிய 8 பேரை தேடும் பணி 2வது நாளாக தீவிரம்
நர்மதா ஆற்றில் மூழ்கிய 8 பேரை தேடும் பணி 2வது நாளாக தீவிரம்

ஆற்றில் தண்ணீரில் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படகுகள் மற்றும் நீர்மூழ்கி வீரர்களுடன், நீச்சல் தெரிந்த உள்ளூர் வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in