பரபரப்பு; அரசு பேருந்தை வழிமறித்த கும்பல்: ஓட்டுநருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு!

வெட்டப்பட்ட பேருந்து ஓட்டுநர் ரெஜி
வெட்டப்பட்ட பேருந்து ஓட்டுநர் ரெஜி

நெல்லையில் அரசுப் பேருந்து ஓட்டுநர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாபநாசத்தில் இருந்து நெல்லை புதிய பேருந்து நிலையம் நோக்கி அரசுப் பேருந்து நேற்று மாலை  சென்று கொண்டிருந்தது. ரெஜி என்பவர் பேருந்தை இயக்கிய நிலையில், கண்ணன் என்பவர் நடத்துநராக பணியில் இருந்துள்ளார்.

பேருந்து கல்லிடைக்குறிச்சி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பைக்கில் வந்த 3 பேர் பேருந்தை வழிமறித்தனர். அவர்களில் 2 பேர் பேருந்தில் ஏறினர். இதனால் ஓட்டுநருக்கும், பைக்கில் வந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பேருந்து வீரவநல்லூர் பேருந்து நிறுத்தம் சென்றபோது, பைக்கில் பின்தொடர்ந்து வந்த நபர், பேருந்து ஓட்டுநர் ரெஜியை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதைத் தடுக்க வந்த நடத்துநர் கண்ணனையும் தாக்கியதால், அவருக்கும் காயம் ஏற்பட்டது.

அவர்களை வெட்டிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. காயம் அடைந்த ஓட்டுநர், நடத்துநர் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்து வந்த போலீஸார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர்.

குற்றம்
குற்றம்

மேலும், ஓட்டுநர் மற்றும் நடத்துநரை வெட்டிவிட்டு தப்பிய கும்பலைத் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே, இந்த சம்பவத்தை கண்டித்தும், மர்ம நபர்களை கைது செய்யக்கோரியும், பாபநாசம் பணிமனையை சேர்ந்த பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in