அதிர்ச்சி... 4-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... சேட்டை செய்த தலைமை ஆசிரியர் கைது!

தலைமை ஆசிரியர் ஜான்சன்
தலைமை ஆசிரியர் ஜான்சன்

ஓட்டப்பிடாரம் அருகே நான்காம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே கோவிந்தாபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் அக்கிராமத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தூத்துக்குடி அருகே மறவன்மடம் பகுதியைச் சேர்ந்த ஜான்சன்(58) என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில் ஜான்சன் அப்பள்ளியில் படிக்கும் இரு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர், கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  அதையடுத்து  இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். 

அவர்களின் விசாரணையில்  தலைமை ஆசிரியர் ஜான்சன் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பது தெரியவந்தது. அதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ்  வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியர், தொடக்கப் பள்ளியில் படிக்கும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in