`சினிமாவை பார்த்து தவறு செய்துவிட்டேன்' என்று கதறிய வாலிபருக்கு தூக்கு தண்டனை

`சினிமாவை பார்த்து தவறு செய்துவிட்டேன்' என்று கதறிய வாலிபருக்கு தூக்கு தண்டனை

கொடூரமாக மாணவி கொல்லப்பட்ட வழக்கில் சேலம் நீதிமன்றம் தீர்ப்பு

15 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக தலையை துண்டித்து கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சேலம் மாவட்டம், ஆத்தூரை சேர்ந்த திவ்யா (பெயர் மாற்றம்) என்ற 15 வயது மாணவி கடந்த 2018-ம் ஆண்டு அதேபகுதியை சேர்ந்த தினேஷ் குமார் (25) என்ற வாலிபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த கொலை தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தினேஷ் குமாரை கைது செய்த ஆத்தூர் காவல் துறையினர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். முதலில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட தினேஷ் குமார் பின்னர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது, "என்னை கொன்று விடுங்கள். தூக்கில் போடுங்கள். சினிமா பார்த்து பெரிய தவறை செய்துவிட்டேன்" என்று தினேஷ் குமார் கதறினார். இந்த வழக்கு சேலம் நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்தது. வழக்கில் அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில், சேலம் நீதிமன்றம், தினேஷ் குமாருக்கு இன்று தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Related Stories

No stories found.