போதைக்காக இருமல் மருந்து விற்பனை; கடை உரிமையாளர் கைது

அசோகன்
அசோகன்

சென்னையில் மருத்துவ சீட்டு இன்றி போதைக்காக இருமல் மருந்தை விற்பனை செய்த மருந்துக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அத்திப்பட்டு ஐசிஎப் காலனி பகுதியை சேர்ந்தவர் அசோகன்(38). இவர் அதே பகுதியில் சொந்தமாக மருந்துக்கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அசோகன் மருத்துவ சீட்டு இல்லாமல் இளைஞர்களுக்கு போதைக்காக இருமல் மருந்தை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கபிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீஸார் அத்திப்பட்டு ஐசிஎப் காலனியில் உள்ள அசோகனுக்கு சொந்தமான சக்தி மெடிக்கல்ஸ் கடையில் நேற்று சோதனை நடத்தி நடத்தினர். சோதனையில் அசோகன் மருத்துவ சீட்டு இல்லாமல் CHOCO என்ற இருமல் மருந்தை (சிரப்) சட்டவிரோதமாக போதைக்காக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in