விபத்தில் புள்ளிமான் உயிரிழப்பு! கார் ஓட்டுநருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

காரில் அடிபட்டு புள்ளிமான் உயிரிழப்பு
காரில் அடிபட்டு புள்ளிமான் உயிரிழப்பு

கோவை அருகே மலைப்பாதையில் விபத்தில் புள்ளிமான் உயிரிழந்ததை அடுத்து, கார் ஓட்டுநருக்கு வனத்துறையினர் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.

கோவை அருகே ஆனைகட்டி மலைப்பாதையில் காட்டுயானைகள், காட்டு மாடுகள், மான்கள் உள்ளிட்டவை அடிக்கடி உலா வருகின்றன. இதனால் மலைப்பாதையில் பயணிக்கும் வாகனங்கள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில், கார் ஒன்றில் ஒரு குடும்பத்தினர் ஆனைகட்டியில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக, சாலையை கடந்த புள்ளிமான் ஒன்று, வேகமாக வந்த காரில் மோதி படுகாயமடைந்தது.

கார் ஓட்டுநருக்கு  அபராதம்
கார் ஓட்டுநருக்கு அபராதம்

தகவலறிந்து அங்கு சென்ற வனத்துறையினர், மானை மீட்டு சிகிச்சை அளித்த போதும், சிகிச்சை பலனின்றி மான் உயிரிழந்தது. இதையடுத்து, கார் ஓட்டுநருக்கு, மாங்கரை வனத்துறையினர் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். தொடர்ந்து உயிரிழந்த புள்ளிமானின் உடலை, ஆனைமலை புலிகள் காப்பகத்தின் மானாம்பள்ளி பகுதியில் வேட்டை பயிற்சி அளிக்கப்பட்டு வரும் புலிக்குட்டிக்கு இரையாக அனுப்பி வைத்தனர்.

மாங்கரை வனத்துறை சோதனை சாவடி (கோப்பு படம்)
மாங்கரை வனத்துறை சோதனை சாவடி (கோப்பு படம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in