பட்டாசு கடைகள் வைக்க லஞ்சமா?: தீயணைப்புத்துறை அலுவலத்தில் சிக்கிய ரூ.1.45 லட்சம்!

திருப்பூர் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலகம்
திருப்பூர் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலகம்

திருப்பூர் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 1.45 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 12-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பல்வேறு இடங்களில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கு அனுமதி கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு வியாபாரிகள் மனு அளித்திருந்தனர்.

பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்குவதில், தீயணைப்புத் துறைக்கு முக்கிய பங்கு இருந்து வருகிறது. இதனால் பட்டாசு கடைகள் அமைக்க தீயணைப்புத் துறையினர் லஞ்சம் பெறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது.

லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை
லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை

இந்நிலையில் திருப்பூர் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் திடீரென இன்று சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத 1.45 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து இந்த பணத்தை வாங்கியது யார்? யாருக்குச் சொந்தமானது என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் தீயணைப்பு துறை அலுவலகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

திருப்பூர் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலகம்
திருப்பூர் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலகம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in