பட்டா மாறுதல் செய்ய 3,00,000 ரூபாய் லஞ்சம்... கையும் களவுமாக சிக்கிய தாசில்தார்!
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர் தென்னரசு, பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கியபோது கையும், களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கினார்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அலுவலகத்தில் தாசில்தாராக தென்னரசு என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவரிடம் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் தனது பெயரில் உள்ள 2 ஏக்கர் நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்து தர விண்ணப்பித்திருக்கிறார்.
அதற்கு தாசில்தார் தென்னரசு ரூ. 3,00,000 லஞ்சம் வேண்டும் என்று கேட்டு, அதில் முதல் தவணையாக ரூ. 1,00,000 லஞ்சமாக கேட்டுள்ளார்.
ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத கருப்பையா, ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் இன்று புகார் செய்தார். இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள், அவரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். அதை கருப்பையா கொண்டு சென்று தாசில்தார் தென்னரசுவிடம் கொடுத்தார்.
அப்போது அங்கே மறைந்திருந்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரை கையும், களவுமாக பிடித்தனர். இது சம்பந்தமாக தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
யூடியூப் சேனலை மூடிவிட்டு, பைக்கை எரிச்சுடுங்க... டிடிஎஃப் வாசனிடம் ஆவேசமான நீதிபதி!
ஆசிய விளையாட்டுப் போட்டி; தங்கம் வென்று திருச்சி டிக்கெட் கலெக்டர் சாதனை!
அதிர்ச்சி... ரூ.2 லட்சத்துக்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட ஊழியர்!
ஆசிய விளையாட்டுப் போட்டி : ஸ்குவாஷில் தங்கப்பதக்கம் வென்றார் தினேஷ் கார்த்திக் மனைவி!
பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் 777 சார்லி பட நாய்; உறுதி செய்த தொகுப்பாளர்