
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 9,000 கோடி ரூபாயை பைஜுஸ் நிறுவனம் அனுப்பியதாக எழுந்த புகாரின் பேரில் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாக வைத்து பைஜுஸ் என்ற ஆன்லைன் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே, பைஜுஸ் நிறுவனம் கடந்த 2011 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் அந்நிய நேரடி முதலீடு என்ற பெயரில் பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, 9,000 கோடி ரூபாயை அந்நிறுவனம் அனுப்பியதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், அமலாக்கத்துறை சார்பில் பைஜுஸ் நிறுவனத்துக்கு இந்தப் புகார் குறித்து விளக்கம் அளிக்கும்படி ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தப் புகாரை மறுத்துள்ள பைஜுஸ் நிறுவனம், இதுகுறித்து விளக்கம் அளிக்க தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் பைஜுஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. ரவீந்திரன் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது நினைவில் கொள்ளத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
உத்தராகண்ட் சுரங்க விபத்து; 41 தொழிலாளர்களின் நிலை என்ன? வெளியானது வீடியோ
பரபரப்பு.. வைரமுத்துவை மகளிர் ஆணையம் விசாரிக்க வேண்டும்... ஹெச்.ராஜா வலியுறுத்தல்!
இறப்புக்கு முன் நடிகர் மாரிமுத்து வெளியிட்ட வீடியோ... ரசிகர்கள் உருக்கம்!
ரூ.1,760 கோடி பணம், மதுபானம் பறிமுதல்! தேர்தல் ஆணையம் அதிரடி