துக்க வீட்டுக்கு சென்று வந்த விசைத்தறி உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி

ரூ.32 லட்சம் பணம், 60 பவுன் நகை கொள்ளை
துக்க வீட்டுக்கு சென்று வந்த விசைத்தறி உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி
பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு நகை, பணம் கொள்ளை

விசைத்தறி உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.32 லட்சம் ரொக்கம், 60 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற திருடர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம். குமாரபாளையம் வேமன்காட்டுவலசை சேர்ந்தவர் விசைத்தறி உரிமையாளர் விமல் (40). நேற்று இவர் தனது குடும்பத்துடன் உறவினர் இறப்பு நிகழ்ச்சிக்கு குமாரபாளையம் அருகே உள்ள ஓலப்பாளையத்துக்கு சென்றுள்ளார். இன்று அதிகாலை 2 மணியளவில் விமல் மட்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கிரில் கேட் பூட்டு, வீட்டு கதவின் பூட்டு ஆகியவை உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.32 லட்சம் ரொக்கம், 60 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

தகவல் அறிந்த குமாரபாளையம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் பார்வையிட்டனர். மேலும், தடயவியல் நிபுனர்களின் உதவியுடன் கைரேகைகள் பதிவு செய்து சேகரித்தனர். பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்ற கொள்ளையர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.