மேல்நிலை குடிநீர் தொட்டிக்குள் கிடந்த அழுகிய சடலம்... கிராம மக்கள் அதிர்ச்சி!

அழுகிய சடலம் கிடந்த மேல்நிலை குடிநீர் தொட்டி
அழுகிய சடலம் கிடந்த மேல்நிலை குடிநீர் தொட்டி

மேல்நிலை குடிநீர் தொட்டிக்குள் அழுகிய உடல் கிடந்த சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிதார் மாவட்டம்
பிதார் மாவட்டம்

கர்நாடகா மாநிலம், பிதார் மாவட்டத்தில் அனதுரா கிராமம் உள்ளது. இங்குள்ள மேல்நிலைத் தொட்டி மூலம் பொதுமக்களுக்கு நீண்ட காலமாக குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக குடிநீரில் துர்நாற்றம் கலந்து வந்துள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஒரு வீட்டில் குழாயில் குடிநீரில் இருந்து தலைமுடி வந்துள்ளது. இதுகுறித்து கிராம பஞ்சாயத்து பிடிஓவிடம் சம்பந்தப்பட்ட வீட்டுக்காரர் புகார் அளித்தார். இதையடுத்து மேல்நிலை தண்ணீர் தொட்டியை ஊழியர்கள் நேற்று சோதனை செய்த போது அதிர்ச்சியடைந்தனர். அந்த தண்ணீர் தொட்டிக்குள் அழுகிய நிலையில் சடலம் கிடந்தது. இதனால் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீஸார், சடலடத்தை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தண்ணீர் தொட்டியில் சடலம் எத்தனை நாட்கள் கிடந்தது என்பது குறித்து போலீஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்து சடலத்தை யாரும் தண்ணீர் தொட்டிக்குள் போட்டார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். அழுகிய சடலம் கிடந்த குடிநீரை பல நாட்களாக குடித்த கிராம மக்கள் தற்போது அச்சமடைந்துள்ளனர். இதனால் தங்கள் உடல்நிலை பாதிக்கப்படலாம் என்று அவர்கள் கவலையடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in