முதல்வர் திறந்து 20 நாட்களே ஆகிறது... 3ம் முறையாக பெயர்ந்தது பள்ளியின் மேற்கூரை; மாணவர்கள் ஷாக்!

முதல்வர் திறந்து 20 நாட்களே ஆகிறது... 3ம் முறையாக பெயர்ந்தது பள்ளியின் மேற்கூரை; மாணவர்கள் ஷாக்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 6 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து 20 நாளில் 3 முறை மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே பேகேபள்ளி எனும் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இதில் 279 மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். 8 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். போதிய வகுப்பறைகள் இல்லை எனக்கூறி, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறை கட்டித் தருமாறு மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2022-23ம் ஆண்டில் ரூ.1.1 கோடி மதிப்பில், 6 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இதனை கடந்த 26ம் தேதி முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். அடுத்த ஒரு வாரத்தில் (அக்.,3) கட்டடத்தின் முதல் தளத்தில் வகுப்பறைக்குள் உள்ள மேற்கூரையும், வெளியே வராண்டா பகுதியில் உள்ள மேற்கூரையும் பெயர்ந்துள்ளது. இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் கவுரம்மா, கட்டடம் தரம் இல்லாமல் இருப்பதாக பி.டி.ஓ.,விடம் புகார் அளித்தார்.

இந்த நிலையில், இன்று (அக்.,16) முதல் தளத்தில் மாணவர்கள் ஓவியப் போட்டியில் பங்கேற்றுள்ளனர். அப்போது அதன் மேற்கூரை பகுதி திடீரென பெயர்ந்து விழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் சிதறி ஓடினர்.

இது குறித்து ஆய்வு செய்ய பி.டி.ஓ சீனிவாச மூர்த்தி, உதவி பொறியாளர் மாது உள்ளிட்டோர் வந்துள்ளனர். விசாரித்ததில் கட்டடத்தை கட்டியது ஒசூர் திமுக எம்எல்ஏ பிரகாசின் நெருங்கிய தொடர்பில் இருக்கும் காண்ட்ராக்ட் நிறுவனம் என்பது தெரியவந்ததுள்ளது. இதனால் அந்த காண்ட்ராக்டர் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்குவதாகக் கூறப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

பிஎஸ்சி படித்தவர்களுக்கு ரூ.1,40,000 சம்பளத்தில் விமான நிலையத்தில் வேலை!

லீக்கானது ‘லியோ' படத்தின் கதை... படக்குழுவினர் அதிர்ச்சி!

பெற்றோரிடம் ரூ.2 லட்சம் பேரம்; குழந்தையை விற்க முயற்சி- அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்

பிரபஞ்ச அழகிப் போட்டியில் புதுமை... 2 திருநங்கைகள் பங்கேற்பு!

எனக்கு அதைத் திருடுற பழக்கம் இருக்கு... நடிகை கீர்த்தி சுரேஷ்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in