அதிர்ச்சி... வீடு புகுந்து அடித்துக் கொலை... நகை, பணம் கொள்ளை!

சம்பவம் நடைபெற்ற குடியிருப்பு
சம்பவம் நடைபெற்ற குடியிருப்பு

மும்பையில் வீடு புகுந்து கொள்ளையர்கள் தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்தார். அவரது கணவரான முதியவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெற்கு மும்பையின் டார்டியோ பகுதியைச் சேர்ந்தவர் மதன் மோகன் அகர்வால் (76). இவரது மனைவி சுரேகா அகர்வால்(70). இவர்கள் இப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தனர். இவர்களது 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் அருகில் உள்ள பகுதியில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் தம்பதியர் வாக்கிங் செல்வதற்காக வீட்டு விட்டு வெளியே வந்தனர். அப்போது அங்கு வந்த 3 கொள்ளையர்கள், வலுக்கட்டாயமாக தம்பதியரை வீட்டிற்குள் இழுத்துச் சென்றனர். அத்துடன் அவர்கள் இருவரையும் கடுமையாக தாக்கியதுடன் அவர்களது வாயில் டேப்பை ஒட்டின கை, கால்களைக் கட்டி ஒரு அறையில் தள்ளினர்.

இதன்பின் வீட்டில் இருந்த தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர். சிறிது நேரம் கழித்து நினைவு திரும்பிய முதியவர் மதன் மோகன் அகர்வால், அடுத்த வீட்டில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். அவர்கள் வந்து பார்த்த போது சுரேகா அகர்வால் சுயநினைவின்றி கிடந்தார்.

இதையடுத்து காயமடைந்த தம்பதியர் இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சுரேகா அகர்வால் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மதன் மோகன் அகர்வால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து கொலை வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், அந்த கட்டிடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் வீட்டில் திருடப்பட்ட பணம், தங்கத்தின் மதிப்பு எவ்வளவு என்பது குறித்து இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்று தெரிவித்தனர். இந்த சம்பவம் தெற்கு மும்பை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in