அதிர்ச்சி... நடுரோட்டில் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் குத்திக்கொலை!

பல்பீர் சிங்
பல்பீர் சிங்

முதல் மனைவியை விவகாரத்து செய்து விட்டு இரண்டாவது மனைவியுடன் வசித்து வந்த ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் நடுரோட்டில் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை நடந்த இடத்தில் விசாரணை
கொலை நடந்த இடத்தில் விசாரணை

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா நகரைச் சேர்ந்தவர் பல்பீர் சிங்(67). இவர் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர். அன்றாடம் இவர் காலையில் நடைபயிற்சி செல்வது வழக்கம். நேற்று காலையில் வழக்கம் போல நடைபயிற்சி சென்றவர் அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில், பாஸ்சி சாலையில் அவர் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அதன் அருகிலேயே ரத்தம் தோய்ந்த கத்தி கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், பல்பீர் சிங் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அத்துடன் கத்தியையும் கைப்பற்றினர்.

கொலை நடந்த இடம்
கொலை நடந்த இடம்

இக்கொலை தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், பல்பீர் சிங்கிற்கு திருணமாகி 13 மற்றும் 10 வயதில் மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்த நிலையில், தனது முதல் மனைவியை விவகாரத்து செய்து விட்டு இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

இதையடுத்து தனது இரண்டாவது மனைவியுடன் அவர் சாந்த் நகரில் வசித்து வந்துள்ளார். அந்த வீட்டில் இருந்து சில அடி தூரத்தில் தான் அவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். அதனால், யார் அவரைக் கொலை செய்தது என்று போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அத்துடன் சாந்த் நகர் பகுதியில் சிசிடிவி காட்சிகளைச் சேகரித்து விசாரித்து வருகின்றனர். பாட்டியாலாவில் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in