அதிர்ச்சி... டிக்கெட் கேட்ட டிடிஆர்; துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர்- ஓடும் ரயிலில் அலறிய பயணிகள்

ரயில்
ரயில்

கொல்கத்தா அருகே தவறான ரயில் டிக்கெட்டில் பயணித்ததை டிடிஆர் தட்டிக்கேட்டதால், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க மாநிலம் தன்பாத்திலிருந்து புதுடெல்லி செல்லும் சியல்டா-புதுடெல்லி ராஜ்தானி விரைவு விரைவில் டிக்கெட் பரிசோதகர் சோதனை மேற்கொண்டு இருந்தார். அப்போது 41 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவரிடம் டிக்கெட் கேட்டபோது, அவர் ஹவுரா செல்லும் ரயிலின் டிக்கெட் வைத்துக் கொண்டு தவறான ரயிலில் ஏறி இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக டிடிஆருக்கும் பயணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பயணி தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ரயில் பெட்டிக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

சியல்டா ராஜ்தானி விரைவு ரயில்
சியல்டா ராஜ்தானி விரைவு ரயில்

நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவல் அறிந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் உடனடியாக அவரை பிடித்து கோடர்மா ரயில் நிலையத்தில் இறக்கி உள்ளூர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அப்பயணியின் பெயர் ஹர்விந்தர் சிங் என்பதும் 41 வயதான அவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்தது. ஹர்விந்தர் சிங் டிக்கெட் எடுத்திருந்த போதும், தவறான ரயிலில் பயணித்ததே இந்த குழப்பத்திற்கு காரணம் என அறிக்கை வெளியிட்டுள்ள கிழக்கு ரயில்வே, பயணிகள் உரிய ரயில் டிக்கெட் உடன் பயணிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in