அடுத்தடுத்து ரெய்டு... தீக்குளிக்க முயன்ற ஓட்டல் உரிமையாளர்; சர்ச்சை அதிகாரியால் பரபரப்பு!

தமிம் அன்சாரி
தமிம் அன்சாரி

10 நாட்களில் இரண்டாவது தடவையாக  ஆய்வு நடத்த வந்த உணவு பாதுகாப்பு அதிகாரியால் அதிருப்தி அடைந்த உணவக உரிமையாளர் திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட புத்தேரி பகுதியில் காஞ்சி பிஸ்மில்லாஹ் என்ற பெயரில் உணவகம்  செயல்பட்டு வருகிறது.  இந்த கடையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சந்திரசேகரன் என்பவர் சோதனை செய்துள்ளார். அப்போது அங்கு பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தியதாகவும் சிக்கனில் நிறமி  சேர்த்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். அதற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறிச் சென்றுள்ளார்.

மேலும் இறைச்சியை சோதனைக்கு அனுப்ப வேண்டும் எனக்கூறி  இறைச்சிகளை எடுத்து சென்றுள்ளார். இந்த நிலையில் திடீரென நேற்றிரவு 8 மணிக்கு வந்த அதே உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சந்திரசேகரன் புகார் வந்திருப்பதாக கூறி சோதனை செய்திட வேண்டும் என்று கூறியுள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த கடையின் உரிமையாளர் தமிம் அன்சாரியிடம் சிக்கன்65-ல் நிறமி சேர்த்திருப்பதால் அபராதம் தொகை செலுத்த வேண்டும் அவற்றை பில் இன்றி செலுத்துகிறீர்களா?, இல்லை முடிவு வந்தபின்பு அதிக தொகையுடன் செலுத்த தயாரா என மறைமுகமாக லஞ்சம் கேட்டிருக்கிறார்‌. இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான கடையின் உரிமையாளர் தமிம் அன்சாரி தனது குடும்பத்தினர் அனைவரையும் வரவழைத்திருக்கிறார்.

பிறகு தனது கையில் பெட்ரோல் பாட்டிலை எடுத்துக் கொண்ட அவர், இதுபோன்று தன்னை மன உளைச்சலுக்கு உள்ளாக்கினால் தீக்குளிக்கவும் தயங்கமாட்டோம் என சந்திரசேகரனிடம் கூறினார்.  இதையடுத்து ஆய்வறிக்கை தயார் செய்த சந்திரசேகரன் அதை  கடையின் சுவற்றில் ஒட்டிவிட்டு அங்கிருந்து சென்றார். இவர் அண்மையில் சர்ச்சையில்  சிக்கி துறை ரீதியான நடவடிக்கையாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு  கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தான் மீண்டும் பணியில் சேர்ந்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

அடுத்த அதிர்ச்சி... நீட் தேர்வால் மாணவி தற்கொலை!

அதிர்ச்சி... ‘பிரேமம்’ இயக்குநருக்கு ஆட்டிஸம் பாதிப்பு!

110 நாட்கள் உண்ணாவிரதம்... 16 வயது சிறுமியின் ஆச்சரிய சாதனை!

1000 ரூபாயில் செயற்கைக்கோள்... பிளஸ் 2 மாணவரின் அசர வைக்கும் கண்டுபிடிப்பு!

படப்பிடிப்பில் பிரபல நடிகர் படுகாயம்... மருத்துவமனையில் அனுமதி! 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in