சித்ரதுர்கா மடத்தின் தண்ணீர் தொட்டிக்குள் தாய், மகள் உடல்கள் கிடந்ததால் அதிர்ச்சி... கொலை செய்யப்பட்டனரா?

மடத்தில் போலீஸார் விசாரணை
மடத்தில் போலீஸார் விசாரணை

சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள கீழக்கோட்டை திப்பேருத்ரா சுவாமி மடத்தில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் தாய், மகள் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்தில் கீழக்கோட்டை திப்பேருத்ரா சுவாமி மடம் உள்ளது. இந்த படத்தின் தண்ணீர் தொட்டியில் இரண்டு பெண்களின் உடல்கள் நேற்று நள்ளிரவு மிதந்தன. இதைப் பார்த்த மடத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுதொடர்பாக போலீஸாருக்கு அவர்கள் தகவல் அளித்தனர். இதனால் விரைந்து வந்த போலீஸார், தண்ணீர் தொட்டிக்குள் உயிரிழந்த நிலையில் இருந்த இரண்டு பெண்களின் உடல்களை வெளியே கொண்டு வந்தனர். அவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது தண்ணீர் தொட்டிக்குள் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் அப்பகுதியில் வசிப்பவர்கள் என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள், சுரேஷ் என்பவரின் மனைவி கீதா(42), மகள் பிரியங்கா(20) என்பது தெரிய வந்தது.

தண்ணீர் தொட்டிக்குள் இரண்டு பேரில் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் சித்ரதுர்கா மாவட்டம் முழுவதும் பரவியது. அவர்களாக தண்ணீர் தொட்டிக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது யாராவது தாய், மகளை அடித்துக் கொலை செய்து தண்ணீர் தொட்டிக்குள் வீசினார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக மடத்தில் இருப்பவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கீதா, பிரியங்கா எப்போது மடத்திற்கு வந்தார்கள் என்பது குறித்து மடத்தில் உள்ள நிர்வாகிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் தொட்டிக்குள் மர்மமான முறையில் தாய், மகளின் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இந்த 5 தொகுதிகளில் வெற்றி இழுபறி!

தமிழ்நாட்டின் மிகப்பெரிய சந்தைக்கு 2 நாட்கள் விடுமுறை... தேர்தலை முன்னிட்டு அறிவிப்பு!

புதுச்சேரியில் இன்று முதல் 144 தடை உத்தரவு... தேர்தல் ஆணையம் அதிரடி!

தாயைப் பிரிந்த ஏக்கம்... 25 நாட்களாக தவித்த குட்டியானை உயிரை இழந்தது!

நேரிலும், செல்போனிலும் வாலிபர் காதல் டார்ச்சர்.... மனமுடைந்த பள்ளி மாணவி தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in