ஸ்பா மையங்களில் கொடிகட்டி பறக்கும் விபசாரம்... சூரத்தில் 30 பெண்கள் மீட்பு!

ஸ்பா மையம்
ஸ்பா மையம்

ஸ்பா மையங்கள் மற்றும் மசாஜ் பார்லர்களில் விபசாரம் செய்தது தொடர்பாக சூரத் நகர் முழுவதும் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த மையங்களில் இருந்து 30 பெண்க்ள் மீட்கப்பட்டுள்ளனர்.

ஸ்பா மையம்
ஸ்பா மையம்

குஜராத் மாநிலத்தில் விபசாரத் தொழிலை அனுமதிக்க முடியாது என்று உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கி கூறியிருந்தார். அவரின் உத்தரவை அடுத்து சூரத் நகரில் உள்ள ஸ்பா மையங்கள் மற்றும் மசாஜ் பார்லர்களில் குற்றப்ப்ரிவு, சிறப்பு நடவடிக்கை குழு, மனிதக் கடத்தல் தடுப்பு பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவு போலீஸார் நேற்று தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது ஸ்பா, மசாஜ் சென்டர் என்ற பெயரில் பல மையங்களில் விபசாரத் தொழில் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

சர்தானாவில் உள்ள பல்லேடியம் ஷாப்பிங் சென்டரில் உள்ள ஸ்பா சென்டரில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட மூன்று பெண்கள் மீட்கப்பட்டனர். சூரத்தில் மட்டும் 70 ஸ்பா மையங்களில் நேற்று சோதனை நடைபெற்றது. இதில் 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 40 பேர் கைது செய்யப்ப்பட்டதுடன், வேலை வாங்கித் தருவதாகக் கூறி பாலியல் தொழிலில் ஈடுபட்ட 30 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in