ஆதாரமின்றி அவதூறு பரப்பும் பயில்வான் ரங்கநாதனை கைது செய்ய வேண்டும்: போலீஸில் பாடகி சுசித்ரா பரபரப்பு புகார்!

ஆதாரமின்றி அவதூறு பரப்பும் பயில்வான் ரங்கநாதனை கைது செய்ய வேண்டும்: போலீஸில் பாடகி சுசித்ரா பரபரப்பு புகார்!

யூடியூப்பில் தன்னைப் பற்றி அவதூறு பரப்பி வரும் நடிகர் பயில்வான் ரங்கநாதனை கைது செய்ய வேண்டும் என சினிமா பின்னணி பாடகி சுசித்ரா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

திருவான்மியூர் பகுதியில் வசிப்பவர் பிரபல சினிமா பின்னனி பாடகி சுசித்ரா. இவர் ‘சுசி லீக்ஸ்’ என்ற பெயரில் ட்விட்டர் பக்கத்தில் நடிகர்,நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். இந்நிலையில் பாடகி சுசித்ரா, நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், சமீபத்தில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் எந்த ஆதாரமுமின்றி தன்னைப் பற்றி அவதூறாகவும், ஆபாசமாகவும் குற்றம் சுமத்தி யூடியூப் வீடியோவில் பேசி வருகிறார். எந்த ஆதாரமுமில்லாமல் நடிகர், நடிகைகள்,குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். குறிப்பாக பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், அவர்களது சொந்த வாழ்க்கை குறித்தும் கொச்சைபடுத்தும் வகையில் பேசி வருகின்றார். இது குறித்து பயில்வான் ரங்க நாதனிடம் கேட்ட போது அவர் உரிய பதில் அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், ஏற்கனவே சுசி லீக்ஸ் மூலமாக எனது தொழில் பெரிதாக பாதிப்படைந்து, மனஉளைச்சல் ஏற்பட்டதாகவும், தற்போது மீண்டும் பயில்வான் ரங்கநாதன் தன்னைப் பற்றி அவதூறு கருத்து பரப்பி வருவதால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, பயில்வான் ரங்கநாதன் மீது உடனே கிரிமினல் வழக்குப்பதிவு செய்து அவரை காவல்துறை கைது செய்ய வேண்டும் என சுசித்ரா புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in