அதிர்ச்சி! ஜார்கண்ட்டில் தமிழக மருத்துவ மாணவர் எரித்துக்கொலை

மாணவர் மதன்குமார்
மாணவர் மதன்குமார்

ராஞ்சியில் தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த மதன்குமார் என்ற மாணவர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் கழகத்தில் முதுநிலை இரண்டாம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்தார். இந்த நிலையில் பாதி எரிந்த நிலையில் மாணவர் மதன்குமார் உடல், கல்லூரி விடுதி அருகே கிடந்துள்ளது. இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், மதன்குமாரின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து அவரது அறைக்குச் சென்று போலீஸார் ஆய்வு நடத்தினர். அங்கு மோட்டாருக்கு பயன்படுத்தப்படும் ஆயில் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சம்பவ இடத்தில் காவல்துறையினர் மற்றும் தடவியல் துறையினர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். மதன்குமாரின் செல்போன், லேப்டாப் ஆகியவைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகு தான் மதன் குமார் உயிரிழப்பு கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ள முடியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in