ரயிலில் பட்டாசு எடுத்துச் செல்லாதீர்கள்: ரூ.5 ஆயிரம் அபராதம்!

ரயில்
ரயில்

தீபாவளி பண்டிகையை ஒட்டி ரயிலில் பட்டாசுகள் கொண்டு சென்றால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.

வித விதமான பட்டாசுகள்
வித விதமான பட்டாசுகள்

இந்த நிலையில் பலரும் அவர்கள் பணியாற்றி வரும் ஊர்களில் இருந்து பட்டாசுகளை வாங்கி சொந்த ஊருக்கு எடுத்து செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் ரயிலில் பட்டாசுகளை எடுத்துச் செல்ல ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விதிகளை மீறி ரயிலில் பட்டாசுகளை எடுத்துச் சென்றால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே காவல்துறை எச்சரித்துள்ளது.

ரயில்வே போலீஸார் தீவிர சோதனை (கோப்பு படம்)
ரயில்வே போலீஸார் தீவிர சோதனை (கோப்பு படம்)

மாநிலம் முழுவதும் ரயில் நிலையங்களில் 1,300 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தடையை மீறி பட்டாசுகளை எடுத்துச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள போலீஸார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை ஒட்டி ஏராளமானோர் ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்துள்ளதால், ரயில் நிலையங்களில் கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

கோடிக்கணக்கில் பணம், தங்கம், வைரம் பறிமுதல்... தெறிக்கவிட்ட தேர்தல் பறக்கும் படை!

அதிர்ச்சி! தவறான சிகிச்சையால் +2 மாணவன் உயிரிழப்பு... மருத்துவர் கைது!

80 வயது முதியவரை 26 வயது இளைஞனாக்கலாம்… விஞ்ஞானிகள் சாதனை!

தேனியில் பரபரப்பு.. கவுன்சிலர்களின் பிச்சை எடுத்து போராட்டம்!

பிக் பாஸ் நிக்சனின் சில்மிஷ வீடியோ... போட்டியாளர்கள் அதிர்ச்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in