இனி கல்லூரியில் இருந்து நீக்கம் தான்... ரூட்டு தல மாணவர்களை எச்சரிக்கும் ரயில்வே ஏடிஜிபி

ரயில்வே ஏடிஜிபி வனிதா
ரயில்வே ஏடிஜிபி வனிதா

ரயில் நிலையங்களில் வன்முறையில் ஈடுபடும் கல்லூரி மாணவர்களின் பட்டியலை எடுத்து அவர்களின் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி, கல்லூரியில் இருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே ஏடிஜிபி வனிதா தெரிவித்துள்ளார்.

சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் ரயில் நிலையங்களில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கல்லூரிகளில் ஒருவருக்கொருவர் இடையே ஏற்படும் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளும் இடமாக ரயில் நிலையங்களை மாணவர்கள் தேர்வு செய்கின்றனர். இதில் சில மாணவர்களின் உயிர்கள் பறிபோவதோடு, இது போன்ற வன்முறை சம்பவங்களால், பயணிகள் பெரும் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலையும் உள்ளது.

ரயில்நிலையங்களில் அதிகரிக்கும் ரூட்தல விவகாரம்
ரயில்நிலையங்களில் அதிகரிக்கும் ரூட்தல விவகாரம்

சமீபத்தில் சென்னையில் உள்ள புறநகர் ரயில் நிலையம் ஒன்றில் மாணவர்கள் ஒருவர் மீது ஒருவர் கல்வீசி தாக்குதல் நடத்தியதில், சில பயணிகளும் காயமடைந்தனர். இதையடுத்து தீவிர ரோந்து பணிகளை ரயில்வே போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவர்கள் மோதல்
மாணவர்கள் மோதல்

இது குறித்து ரயில்வே காவல்துறை ஏடிஜிபி வனிதா கூறுகையில், “ரயில்கள், ரயில் நிலையங்களில் ஆயுதங்களுடன் வன்முறை, சாகசங்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு அறிவுரைகள் கூறியும் பயனில்லை என்பதால் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். மாணவர்களின் பட்டியலை எடுத்து அவர்களின் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி, கல்லூரியில் இருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

பாரதியார் சிலை முன்பு சாதி மறுப்பு திருமணம்... காதல் ஜோடிக்கு குவியும் பாராட்டு!

கடலூரில் பரபரப்பு... ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் போலீஸார் சோதனை!

பாரில் நடனமாடிய பெண்களுடன் தகராறு... தட்டிக் கேட்டவருக்கு கத்திக்குத்து... 'டெரர்' வாலிபரிடம் விசாரணை

சோகம்…'அங்கிள் பெர்ஸி' திடீர் மரணம்... இலங்கை கிரிக்கெட் அணி அதிர்ச்சி!

அதிர்ச்சி... மனைவி தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொன்ற கணவன்... போலீஸில் சரண்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in