
புழல் சிறையில் தன்னை யாரும் பார்க்க வராததால் விரக்தியடைந்த கைதி அளவுக்கதிகமான பிபி மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையைச் சேர்ந்தவர் நாகேந்திரபாபு (33). இவர் மீது பண மோசடி உள்ளிட்ட சில வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதில் பண மோசடி தொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் போலீஸாரால் கைது செய்யப்பட்ட அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிறையில் தனிமையில் வாடி வந்த அவர், தனது குடும்பத்தை காணாது தவித்துப்போனதாக தெரிகிறது. ஆனால், இரண்டு மாதம் ஆகியும். நாகேந்திரபாபுவை உறவினர்கள், நண்பர்கள் யாரும் வந்து பார்க்காததால் அவர் விரக்தியடைந்தார்.
இதனையடுத்து சிறையில் அவர், அளவுக்கு அதிகமாக ரத்த அழுத்த மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்று மயங்கி விழுந்தார். இதை பார்த்து சக கைதிகள் அளித்த தகவலின் பேரில் சிறைக்காவலர்கள் நாகேந்திரபாபுவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து புழல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
உத்தராகண்ட் சுரங்க விபத்து; 41 தொழிலாளர்களின் நிலை என்ன? வெளியானது வீடியோ
பரபரப்பு.. வைரமுத்துவை மகளிர் ஆணையம் விசாரிக்க வேண்டும்... ஹெச்.ராஜா வலியுறுத்தல்!
இறப்புக்கு முன் நடிகர் மாரிமுத்து வெளியிட்ட வீடியோ... ரசிகர்கள் உருக்கம்!
ரூ.1,760 கோடி பணம், மதுபானம் பறிமுதல்! தேர்தல் ஆணையம் அதிரடி