வழி விடாததால் ஆத்திரம்: பள்ளி மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்!

மாணவர்கள் மீது தாக்குதல்
மாணவர்கள் மீது தாக்குதல்

புதுச்சேரி திருக்கனூரில் பாரதி தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படித்த மாணவர்கள் நேற்று மாலை வீடு திரும்பும் போது அனைவரும் ஒன்றாக கைகோர்த்தபடி சென்றனர்.

அப்போது பின்னால் இருசக்கரத்தில் வந்த இருவர் தொடர்ந்து பைக்கில் ஹாரன் அடித்தும் மாணவர்கள் வழிவிடாமல் மிக சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த பைக்கில் வந்தவர்கள் மாணவர்களைச் சரமாரியாக தாக்கி விட்டு சென்றனர். இதில் ஐந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவானது.

மாணவர்கள் மீது தாக்குதல்
மாணவர்கள் மீது தாக்குதல்

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவரின் தந்தை நாகராஜன் என்பவர் திருக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அதே பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களான திருக்கனூரைச் சேர்ந்த ரியாஸ்(24) மற்றும் திருமாலை(24) ஆகியோரை கைது செய்தனர்.

இவர்கள் இருவரும் படிப்பை முடித்து விட்டு திருக்கனூரில் ஓட்டல் ஒன்றில் பணியாற்றி வருவது விசாரணையில் தெரியவந்தது.

இதையும் வாசிக்கலாமே...

பயணிகள் அதிர்ச்சி! தீபாவளியையொட்டி... விமான கட்டணங்களிலும் கொள்ளை!

வைகை அணை திறப்பு… 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஐயப்பனுக்கு தங்க அங்கி..  சபரிமலையில் இன்று நடை திறப்பு!

ரூ.25,00,000 பரிசுத் தொகையை... தான் படித்த கல்லூரிகளுக்கு பிரித்துக் கொடுத்த வீரமுத்துவேல்... குவியும் பாராட்டுக்கள்!

செம ஹிட்டு... தீபாவளி கொண்டாட்டம்... 'ஜிகர்தண்டா2' படத்திற்கு முதல் ரிவியூ கொடுத்த பிரபலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in