தாயின் நிவாரண நிதி தராத அதிகாரிகள்... பனை மரத்தில் ஏறி போராட்டம் நடத்திய மகன்!

பனை மரத்தில் அமர்ந்திருக்கும் மகன்
பனை மரத்தில் அமர்ந்திருக்கும் மகன்

கஜா புயலில் இறந்த தனது தாயின்  நிவாரண நிதியை  தராத அதிகாரிகளை கண்டித்து பனை மரத்தில் ஏறி போராட்டம் நடத்திய மகனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுக்கா பனையங்காடைச் சேர்ந்த ராமச்சந்திரன். இவரது தாயார் அம்மாளு அம்மாள் கடந்த 2018ம் ஆண்டு வீசிய கஜா புயலில் உயிரிழந்தார். இறந்த மறுநாள் பிரேத பரிசோதனை நடந்ததாக கூறப்படுகிறது. இறந்த தாயாரின் பிரேத பரிசோதனை அறிக்கையை வைத்து அரசு அறிவித்த 10 லட்சம் ரூபாய் நிவாரணம் கேட்டு 5 ஆண்டுகளாக வருவாய் துறையினரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட முறை மனு அளித்திருக்கிறார்.

வருவாய்த் துறையினர் பல்வேறு காரணங்களை கூறி நிவாரணம் அளிக்க மறுத்துவிட்டனர். இதனால் மனமுடைந்த ராமச்சந்திரன் பனை மரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ள போவதாக வருவாய்த்துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

தீயணைப்புத்துறை வாகனம்
தீயணைப்புத்துறை வாகனம்

அதனைத்தொடர்ந்து, இன்று காலை 9 மணி அளவில் தோப்புத்துறை ரயில்வே நிலையம் அருகே உள்ள 80 அடி உயரமுள்ள பனைமரத்தில் ஏறி, இறந்த தனது தாயாருக்கு அரசு அறிவித்த நிவாரணத் தொகை வேண்டும் என முழக்கமிட்டவாறு மரத்தின் உச்சியில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். தகவல் அறிந்து வந்த வருவாய்த் துறையினர், போலீஸார், தீயணைப்புத் துறையினர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் நிவாரணம் கொடுத்தால் மட்டுமே பனைமரத்தை விட்டு கீழே இறங்குவேன் என  ராமச்சந்திரன் இறங்க மறுத்து  தொடர்ந்து போராட்டம் நடத்தினார். பின்னர் ஒருவழியாக அவரை  பனை மரத்திலிருந்து கீழே இறக்கினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


இதையும் வாசிக்கலாமே... உஷார்; வங்கக்கடலில் நாளை உருவாகும் 'மிதிலி' புயல்: வானிலை மையம் எச்சரிக்கை!

இயக்குநர் மணிவண்ணன் மரணத்திற்கு இதுதான் காரணமா?: 10 ஆண்டுகளுக்குப் பின் வெளியான உண்மை!

'இந்த அரண்மனை வாடகைக்கு விடப்படும்': ஜோத்பூர் இளவரசியின் சுயதொழிலால் கரன்சி மழை!

உத்தரப் பிரதேசத்தில் டெல்லி-சஹர்சா வைசாலி அதிவிரைவு ரயிலில் தீவிபத்து... 19 பேர் காயம்

மகிழ்ச்சி... சிலிண்டர் விலை ₹ 57 குறைவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in