நடிகை பாலியல் வன்கொடுமை புகார்: தயாரிப்பாளர் கைது

நடிகை பாலியல் வன்கொடுமை புகார்: தயாரிப்பாளர் கைது

நடிகை கொடுத்த பாலியல் வன்கொடுமை புகாரை அடுத்து திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகருமான ஹர்ஷவர்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னட சினிமா தயாரிப்பாளர் டி.ஜி.ஹர்ஷவர்தன் எனும் விஜய பார்கவ். இவர், ’விஷன் 2023’ என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இவருக்கும் துணை நடிகை ஒருவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. திருமணம் செய்வதாகக் கூறி துணை நடிகையுடன், ஹர்ஷவர்தன் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

ஹர்ஷவர்தன்
ஹர்ஷவர்தன்

கடந்த சில நாட்களாக துணை நடிகையுடன் பேசுவதை ஹர்ஷவர்தன் தவிர்த்தார். இதனால், அவரை நேரில் சந்தித்த துணை நடிகை, திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு மறுப்புத் தெரிவித்த ஹர்ஷவர்தன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதையடுத்து அந்த நடிகை, திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கொலை மிரட்டலும் விடுத்ததாகவும் ஹர்ஷவர்தன் மீது அன்னபூர்னேஸ்வரி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து, ஹர்ஷவர்தன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in