மதுரை சிறைக்குள் கைதி மரணம்!

மதுரை சிறைக்குள் கைதி மரணம்!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் இருக்கும் குரும்பபட்டி கிராமத்தைச் சேரந்தவர் கருப்பையா மகன் சுரேஷ்குமார் (36). கொலை வழக்கு ஒன்றில் தண்டனைக்கு உள்ளான இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

நேற்றிரவு வழக்கம் போல சிறையில் படுத்துத்தூங்கிய அவருக்கு இன்று அதிகாலையில் வலிப்பு ஏற்பட்டது. அதைக் கவனித்த சக கைதிகள் அவரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இரும்புக் கம்பியைப் பிடித்தால் வலிப்பு நிற்கும் என்று நினைத்து சிறைக் கம்பியைப் பிடிக்க வைத்தார்கள். கைதிகளின் கூச்சல் சத்தம் கேட்டு வந்த சிறைக்காவலர்கள், சுரேஷ்குமாரை உடனடியாக சிறை வளாகத்துக்குள்ளேயே இருக்கும் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு அவருக்கு மீண்டும் வலிப்பு ஏற்பட்டது. முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே அவர் இறந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in