அதிர்ச்சி... பேய் ஓட்டுவதாக சிறுமி பலாத்காரம்... பூசாரி அதிரடியாக கைது!

மாந்த்ரீக பூஜை
மாந்த்ரீக பூஜை

பேயை விரட்டுவதாகக்கூறி 18 வயது சிறுமியை பூசாரி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், பதோஹியைச் சேர்ந்த 18 வயது சிறுமிக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டது. இதனால், அந்த சிறுமியை அவரது பெற்றோர், மோதிலால் என்ற பூசாரி ஒருவரிடம் அழைத்துச் சென்றனர்.

அந்த சிறுமியை உடலில் பேய் இருப்பதாக கூறிய மோதிலால், அதை விரட்ட 4000 ரூபாய் கேட்டுள்ளார். அத்துடன் சிறுமியை தனியாக வைத்து சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதை நம்பி மோதிலாலுடன் சிறுமியை பெற்றோர் அனுப்பி வைத்தனர்.

கைது
கைது

இதையடுத்து சிறுமியை தர்வாசி கிராமத்திற்கு டூவீலரில் மோதிலால் அழைத்துச் சென்றுள்ளார் அங்கு உள்ள கோயிலுக்குப் பின்புறம் உள்ள அறைக்கு அந்த சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மோதிலால் மிரட்டியுள்ளார்.

ஆனால், தனக்கு நடந்த கொடுமை குறித்து சிறுமி, பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து மோதிலால் மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சிறுமிக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது.

இதையடுத்து மோதிலால் மீது 363 (கடத்தல்), 376 (பலாத்காரம்), 420 (ஏமாற்றுதல்) மற்றும் 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று நவராத்திரி திருவிழா ஆரம்பம்... என்னென்ன விசேஷம்? எப்படி கொண்டாடுவது?!

கருணாநிதியின் ‘மூத்த பிள்ளை’க்கு வந்த சோதனை!

ஒரு சிக்ஸர் கூட அடிக்கலை… 20 ஓவரில் 427 ரன்கள் எடுத்து மகளிர் கிரிக்கெட் அணி உலக சாதனை!

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்… மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!

ஜீன்ஸ், லெக்கின்ஸ் போட்டு கோர்ட்டுக்கு வரக்கூடாது... வக்கீல்களுக்கு பார் கவுன்சில் கறார் உத்தரவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in