அதிர்ச்சி... மருத்துவர்கள் அலட்சியத்தால் கர்ப்பிணிகள் உயிரிழப்பு; மதுரை ஆட்சியரின் கள ஆய்வில் பகீர்

கர்ப்பிணி செம்மலர்
கர்ப்பிணி செம்மலர்

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இரண்டு கர்ப்பிணி பெண்கள் உயிரிழந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் கள ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் செம்மலர் மற்றும் குப்பி ஆகியோர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இந்த இரண்டு பேரும் மருத்துவரின் தவறான சிகிச்சையால் உயிரிழந்தனர். இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டார். அதன்படி அதிகாரிகள் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது கர்ப்பிணிகளுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படாததும் அவர்கள் இறந்த பிறகு சிகிச்சை ஆவணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதும் தெரியவந்துள்ளது. மேலும் கற்பனைகள் இழந்த பிறகு செயற்கை சுவாசம் அளித்த அவலமும் நடந்து இருக்கிறது.

கர்ப்பிணி செம்மலர் சிகிச்சைக்கான ஆவணத்தில் ஆகஸ்ட் 28ம் தேதி இருதய சிகிச்சை நிபுணரை அழைத்ததாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் ஆஸ்பிரின் மாத்திரை வழங்கப்பட்டதாக எழுதிய தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31ம் தேதி செம்மலருக்கு ரத்தம் உறையும் காலவிகிதம் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது. வாந்தி எடுத்ததாகவும், வயிறு வீங்கி இருப்பதாகவும் சிகிச்சை ஆவணத்தில் புதிதாக எழுதப்பட்டு இருக்கிறது. கர்ப்பிணி இறந்த பிறகு இதய துடிப்பு சிகிச்சை அளிக்கப்பட்ட மருந்து விவரங்கள் ஆய்வுகள் சிகிச்சை ஆவணத்தில் எழுதப்பட்டு இருப்பது தணிக்கையில் தெரியவந்தது.

கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் தவறு செய்த மருத்துவர்கள், ஆவணங்களில் திருத்தம் மேற்கொண்டவர்களை பணியிடை நீக்கம் செய்ய அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வருக்கு மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டிருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in