பிரபல யூடியூபர் மர்ம மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி!

யூடியூபர் ராகுல்
யூடியூபர் ராகுல்

ஈட் கொச்சி ஈட் (Eat kochi Eat) என்னும் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் உணவு பிரியர்களுக்கு நன்கு பரிட்சயமானவர் ராகுல் என்.குட்டி (33). கடந்த 2015ம் ஆண்டு முதல் உணவுக்கான பிரத்யேக யூடியூப் சேனல் தொடங்கினார். இதுவே கேரளாவின் முதல் உணவுக்கான யூடியூப் சேனல் என்று அறியப்படுகிறது.

இந்நிலையில், கொச்சி மாதவனத்தில் உள்ள அவரது வீட்டில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு தூக்கிட்ட நிலையில் கிடந்துள்ளார். இதைக்கண்ட அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ராகுல் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது ரசிகர்களிடையே இடையே கடும் அதிர்ச்சியையும் மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

யூடியூபர் ராகுல்
யூடியூபர் ராகுல்

ஈட் கொச்சி ஈட்(Eat Kochi Eat) என்ற சமூக வலைதள பக்கங்கள் மூலம் பிரத்யேக உணவு சார்ந்த காணொலிகளை வெளியிட்டு வந்த இவர், உணவு பிரியர்கள் மத்தியில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றவரும்கூட. சமையல் கலாச்சாரம் என்ற அமைப்பின் உறுப்பினராகவும் அவர் இருந்து வந்தார். இந்தியாவில் ஃபேஸ்புக் நிதியுதவியுடன் இயங்கிய முதல் சமூக வலைதள பிரபலம் ராகுல் என்ற பெருமையும் அவருக்கு உள்ளது.

கடந்த புதன்கிழமை வரை சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்த ராகுல் அதன் பிறகு சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான வகையிலான மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், அதே கோணத்தில் விசாரணையை நடத்தி வருகின்றனர். ராகுலை இழந்து அவரது மனைவியும், இரண்டு வயது மகனும் தவித்து வரும் நிலையில், இவரது மறைவு குறித்து பலரும் தங்கள் சமூக வலைதளங்களில் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in